பழநியில் ஆன்லைன் மூலம் ஏடிஎம் கார்டில் ரூ.15 ஆயிரம் திருட்டு

திண்டுக்கல்: பழநி பெண்ணிடம் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் ஏடிஎம் கார்டில் ரூ.15 ஆயிரம் திருடியதாக கூடுதல் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பழநி இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றுபவர் அங்கையர்கன்னி (40). இவர் திண்டுக்கல் கூடுதல் எஸ்பி சுகாசினியிடம் அளித்த புகார் மனுவில், ‘நான் பணியில் இருக்கும்போது எனது மொபைல் போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் எனது ஏடிஎம் கார்டு மூலம் ரூ.15 ஆயிரம் எடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனது ஏடிஎம் கார்டு என்னிடம்தான் உள்ளது. அதில் உள்ள எண்களை நான் யாருக்கும் கொடுக்கவில்லை. வங்கிக்கு சென்று கேட்டால் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து விசாரிக்கிறோம் என்கின்றனர். இந்த மாதிரியான ஆன்லைன் மோசடியால் மனஉளைச்சலாக உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கூடுதல் எஸ்பி, இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க அறிவுறுத்தினார்.

Related Stories: