பிரேசிலில் பேருந்து பயணிகள் 37 பேரை பிணை கைதிகளாக சிறைபிடித்த நபர் சுட்டு கொல்லப்பட்டார்

பிரேசில்: பிரேசில் நாட்டில் பேருந்தில் வைத்து 37 பயணிகளை பிணைக் கைதியாக சிறைபிடித்த நபர் சுட்டு கொல்லப்பட்டான். ஓசையின்றி ஊர்ந்து சென்று அதிரடி தாக்குதலை நிகழ்த்தும் காவல்துறையினரின் அதிரடி படையினர் அவனை சுட்டு கொன்றுள்ளனர். பிரேசில் நாட்டில் ரியோ-டி- ஜெனிரோ நிட்டைரோ நகரங்களுக்கு இடையே பல கிலோ மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட பாலம் அமைந்திருக்கிறது. இந்த பாலத்தில் பிரேசில் நாட்டு நேரப்படி அதிகாலை 5 மணி அளவில் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பாலத்தின் நடுவே துப்பாக்கி முனையில் பேருந்தை நிறுத்திய அடையாளம் தெரியாத மர்ம நபர் அனைவரையும் பிணைக் கைதியாக சிறை பிடிப்பதாக அறிவித்தான். இதனை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதை அடுத்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த வந்த பிரேசில் காவல் துறையினர் முதலில் பேருந்தை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்தனர். பின்பு  பாலத்தின் இரு மார்க்கத்திலும் போக்குவரத்தை தடை செய்தனர். இதை அடுத்து பிரேசில் காவல் துரையின் அதிரடி படையின் ஸ்னீ ப்பர் செல் காவல் துறையினர் கடத்தல்காரனோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே பேருந்தை மெதுவாக நெருங்க தொடங்கினர். ஒரு கட்டத்தில் பை ஒன்றை தூங்கி விசுவதற்காக கடத்தல்காரன் பேருந்தில் இருந்து கீழே இறங்கினான். இதை அடுத்து அவனை அடையாளம் கண்டு கொண்ட அதிரடி படையினர் அவன் எதிர்பாராத தருணத்தில் சுட்டு வீழ்த்தினர். நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Related Stories: