×

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் காவலர் மீது தாக்குதல்: அக்கா, தங்கை மீது புகார்

சென்னை: சென்னை டி.பி.சத்திரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சாம்சன் (40) என்பவரின் மகள் ஸ்ருதிகா (5), நேற்று முன்தினம் இரவு முதல் மாடியில் விளையாடியபோது, திடீரென தவறி கீழே விழுந்தாள். படுகாயமடைந்த சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு, சிறுமியின் பெற்றோரை டாக்டர்கள் உள்ளே அனுமதிக்காததால் தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து புறக்காவல் நிலைய முதல்நிலை காவலர் ஷீபா அங்கு வந்து, பெற்றோரை வெளியே நிற்கும்படி கூறியுள்ளார். அப்போது தகராறில் ஈடுபட்ட சிறுமியின் தாய் ராஜலட்சுமி மற்றும் அவரது தங்கை ஆகிய இருவரும், காவலர் ஷீபாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீசில் ஷீபா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

4 திருவொற்றியூர் காலடிப்பேட்டை சின்ன மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் (38), நேற்று செங்குன்றம் - சோத்துப்பாக்கம் சாலையில் பைக்கில் சென்றபோது, டிராக்டர் மோதி இறந்தார். 4வடபழனியை சேர்ந்த ஜெயவேல் (49) நேற்று மாலை பாடி மேம்பாலத்தில் நின்று செல்போனில் பேசி கொண்டு இருந்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து, படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி  இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயவேல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்தாரா என விசாரிக்கின்றனர்.

7 பேருக்கு குண்டாஸ்
சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஓட்டேரி எஸ்.வி.நகரை சேர்ந்த முருகன் (35), செல்வம் (32), திருவண்ணாமலை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த கமலக்கண்ணன் (30), திருச்சி மாவட்டம் சேக்கரை பஜார் பகுதியை ேசர்ந்த தட்சிணாமூார்த்தி (44), பழைய வண்ணாரப்பேட்டை பெரிய மார்க்கெட் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23), கொருக்குப்பேட்டை எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த சக்திவேல் (37), தேனாம்ேபட்டை கார்ப்பரேஷன் காலனியை ேசர்ந்த கவுதம் (22) ஆகிய 7 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags : Government Hospital, Kilpauk,Girl Guard, Sister,
× RELATED வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி...