×

மின்வெட்டை சமாளிக்கும் வகையில் 22 ரயில் நிலையங்களில் விரைவில் இன்வெட்டர் வசதி: ரயில்வே நிர்வாகம் முடிவு

சென்னை: சென்னை கடற்கரை - ெசங்கல்பட்டு மார்க்கம், மூர்மார்க்கெட் - அரக்கோணம் மார்க்கம், மூர்மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கத்தில் தினசரி 150க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேப்போல், சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் தினசரி 100க்கும் மேற்பட்ட பறக்கும் ரயில்களும் இயக்கப்படுகிறது. ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், செல்ல வேண்டிய இடங்களுக்கு போக்குவரத்து இடையூறு இல்லாமல் விரைந்து செல்ல முடியும் என்பதாலும் தினசரி 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்  கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் செல்போன் திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. ரயில் நிலையங்களில் அடிக்கடி இரவில் மின்வெட்டு ஏற்படுவதால் அதை திருடர்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டு ரயில் நிலையங்களில் தனியாக நிற்பவர்களிடம் செல்போன் திருட்டு, செயின் பறிப்பு போன்ற  சம்பவங்களில் ஈடுபடுவதாக ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசாருக்கு புகார்கள் வருகின்றன.  

எனவே ரயில் நிலையங்களில் மின்ெவட்டு பிரச்னையை சமாளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று ரயில்ேவ நிர்வாகத்திடம் தொடர்ந்து கூறிவந்தனர். இதையடுத்து ரயில் நிலையங்களில் இன்வெர்ட்டர் பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ரயில் நிலையங்களில் இன்வெட்டர் பொருத்துவதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் அது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, பூங்கா ரயில்நிலையம், சேத்துப்பட்டு, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, பெரம்பூர், அரக்கோணம், வேப்பம்பட்டு, திருத்தணி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, மணலி, வேளச்சேரி, மயிலாப்பூர், தரமணி போன்ற 22 முக்கிய ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக இன்வெட்டர் பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : cope , electrode, Inverter,railway stations
× RELATED கள்ளக்காதலிக்காக நடந்த கொடூரம்...