ஏற்றுமதி நிறுவன எரிபொருள் அட்டையை திருடி 10.2 லட்சத்திற்கு டீசல் நிரப்பி மோசடி: முன்னாள் ஊழியருக்கு வலை

சென்னை: ஏற்றுமதி நிறுவன எரிபொருள் கணக்கு அட்டையை திருடி, 10.20 லட்சத்திற்கு வாகனங்களுக்கு டீசல் நிரப்பி மோசடி செய்த முன்னாள் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.எழும்பூர் ருக்குமணி லட்சுமிபதி தெருவில் தனியார் ஏற்றமதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இதற்கிடையே கடந்த 2018-19ம் நிதியாண்டிற்கான கணக்கு வழக்குகளை அந்த  நிறுவனம் ஆய்வு செய்தது. அப்போது மோட்டார் பராமாரிப்பு பிரிவில் 10.20 லட்சத்திற்கு மோசடி நடந்து இருப்பது தெரியவந்து. இதுபற்றி, இந்த நிறுவனத்தில் வாகன பிரிவு மேலாளர் பிரேம்குமார் (53) விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 2018ம் ஆண்டு பீகார் மாநிலயத்தை சேர்ந்த பிரவீன் குமார் (23) என்பவர் வேலை ெசய்து வந்தார். அவர் ஏற்றுமதி நிறுவனத்தின்  வாகனங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டை மூலம் எரிபொருள் நிரப்பும் பணியை செய்து வந்தார்.

அப்போது பல முறைகேடுகள் செய்தாதல் பிரவீன்குமாரை கடந்த ஆண்டு வேலையில் இருந்து நீக்கிப்பட்டார். வேலையை விட்டு செல்லும் போது, பிரவீன்குமார் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிபொருள் அட்டையை திருடிக்கொண்டு  சென்றுவிட்டார். பிறகு இந்த எரிபொருள் அட்டையை ைவத்து பீகார் மாநிலத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் நிலையங்களில் ₹10.20 லட்சத்திற்கு வாகனங்களில் டீசல் நிரப்பி மோசடி செய்தது  தெரியவந்தது.இதையடுத்து ஏற்றுமதி நிறுவனத்தில் மோட்டர் பிரிவு மேலாளர் பிரேம்குமார் சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் முன்னாள் வடமாநில ஊழியர் பிரவீன் குமார் மீது புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: