துளித்துளியாய்.....

* உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய மல்யுத்த அணியில், நட்சத்திர வீரர் சுஷில் குமார் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். இதற்கான தகுதிப் போட்டியில் சக வீரர் ஜிதேந்தர் குமாருடன் நேற்று மோதிய சுஷில் 4-2 என்ற புள்ளிக்  கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.
* ஸ்டீவன் ஸ்மித்தை கிண்டல் செய்வதை இங்கிலாந்து ரசிகர்கள் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து விளையாட்டுத் துறை அமைச்சர் நிகெல் ஆடம்ஸ் வலியுறுத்தி உள்ளார்.
* பவுன்சர் பந்துவீச்சில் காயம் அடைந்து ‘மூளை அதிர்ச்சி’ பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்க, வீரர்கள் இதற்காக தயாரிக்கப்படும் பிரத்யேக ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது.
* இலங்கை சுழல் அகிலா தனஞ்ஜெயா, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோரது பந்துவீச்சு ‘எறிவது’ போல் உள்ளதாக நடுவர்கள் புகார் செய்துள்ளனர். கடந்த 10 மாதங்களில் அகிலா 2வது முறையாக இந்த புகாருக்கு ஆளாகி  உள்ளதால் அவர் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் வாய்ப்பு எழுந்துள்ளது.
* இலங்கை அணியுடன் நடக்க உள்ள டி20 தொடரில் போல்ட், வில்லியம்சனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான நியூசி. அணி கேப்டனாக டிம் சவுத்தீ நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Drooling
× RELATED திருமண நாள் கொண்டாட்டத்தின் போது...