மும்பையில் உலக செஸ்

மும்பை: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் (யு-14, யு-16, யு-18) மும்பையில் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறுவர், சிறுமியர் என 2 பிரிவுகளில் போட்டிகள் நடக்கும். இளம் வயது கிராண்ட்  மாஸ்டர்களான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, நாக்பூரைச் சேர்ந்த திவ்யா தேஷ்முக் ஆகியோர் விளையாட உள்ளனர். இந்த தொடரில் ஜமைக்கா, இ்த்தாலி, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, ஜெர்மனி, செக் குடியரசு, போலந்து, அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா, டென்மார்க் என 62 நாடுகளை சேர்ந்த சுமார் 400க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள்  பங்கேற்கின்றனர்.

Tags : World Chess , Mumbai
× RELATED இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2ம்...