உலக பேட்மின்டன் 3வது சுற்றில் பிரனாய்

பாசெல்: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் தகுதி பெற்றுள்ளார்.இரண்டாவது சுற்றில் 5 முறை உலக சாம்பியனான லின் டானுடன் (சீனா) நேற்று மோதிய பிரனாய் 21-11, 13-21, 21-7 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். லின் டானுக்கு எதிராக அவர் பெற்ற 3வது  வெற்றி இது. முன்னதாக, 2018 இந்தோனேசிய ஓபன் தொடரிலும், 2015 பிரெஞ்ச் ஓபன் தொடரிலும் வென்றிருந்தார்.

மற்றொரு இந்திய வீரர் சாய் பிரனீத் தனது 2வது சுற்றில் கொரியாவின் டாங் கியூன் லீயை 21-16, 21-15 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
Advertising
Advertising

Related Stories: