3வது டெஸ்டில் ஸ்மித் இல்லை

இங்கிலாந்து அணியுடன் நாளை தொடங்க உள்ள 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில், நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஸ்மித் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டின் 2  இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்திய ஸ்மித், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் ஆர்ச்சரின் அதிவேக பவுன்சர் பந்து ஹெல்மெட்டை பலமாகத் தாக்கியதால் காயம் அடைந்தர். ‘மூளை அதிர்ச்சி’ காரணமாக அவர் 2 வது  இன்னிங்சில் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக மாற்று வீரர் லாபஸ்ஷேன் களமிறங்கி விளையாடினார். 3வது டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில், அந்த போட்டியில் ஸ்மித் விளையாட  மாட்டார் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா நேற்று அறிவித்துள்ளது. நடப்பு ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக 144, 142, 92 ரன் விளாசி நல்ல பார்மில் இருக்கும் ஸ்மித் இல்லாதது ஆஸி. அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: