ஸ்ரீசாந்தின் ஆயுள் தடை 7 ஆண்டாக குறைப்பு: 2020 செப்டம்பரில் விளையாடலாம்

புதுடெல்லி: இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தடையை 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரின்போது ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் கடந்த 2013ம் ஆண்டு ஸ்ரீசாந்துக்கு ஆயுள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மார்ச் 15ம் தேதி பிசிசிஐ  ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உத்தரவை ரத்து செய்தது.

Advertising
Advertising

இந்த நிலையில், ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தடையை 7 ஆண்டாகக் குறைத்து பிசிசிஐ விசாரணை அதிகாரி டி.கே.ஜெயின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அவரது தடைக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.  அதன் பிறகு சாந்த் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கலாம். அவருக்கு தற்போது 36 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய அணிக்காக அவர் 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Related Stories: