சகிப்புத்தன்மை இன்மையும், இனப் பாகுபாடும் ஆட்சியமைப்பை பாதிக்கும்: மன்மோகன் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘‘சகிப்புத்தன்மை இன்மை, இனப் பாகுபாடு ஆகிய வெறுக்கத்தக்க நடைமுறைகள் நமது நாட்டின் ஆட்சியமைப்பை பாதிக்கும்,’’  என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு,  டெல்லியில் ராஜிவ் இளைஞர் அறக்கட்டளை ஏற்பாடு ெசய்திருந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கலந்து  கொண்டார். அதில், கடந்த 10 ஆண்டுகளில் சமூகத்திற்கு சிறப்பான சேவையற்றிய தனிநபர்கள், அமைப்புகளுக்கு `ராஜிவ் காந்தி ஜன்ம பஞ்சா சப்ததி புராஸ்கார் விருதுகளை அவர் வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: சகிப்புத்தன்மை இன்மை, இனப்பாகுபாடு, சில பிரிவினர் மீது வெறுக்கத்தக்க வகையில் வன்முறை ஏவி விடப்படுவது,

சட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு வன்முறை சம்பவத்தில் ஈடுபடும் குழுக்கள் போன்றவற்றால் நாட்டின் ஆட்சி அமைப்பு முறை பாதிக்கும். இதை கட்டுப்படுத்துவதில் நமது பங்களிப்பை வழங்க வேண்டும்.

ராஜிவ் காந்தி நமது நாட்டுக்கு தேவையான உண்மையான உதவிகளை வழங்கினார். இதன் மூலம், இந்தியா நவீனமடைந்ததுடன் அறிவியல் பூர்வமான உலகிற்குள்ளும் அடியெடுத்து வைத்தது. தகவல், தொலைத்தொடர்பு துறையில் நல்ல  முன்னேற்றம் அடைந்தது. சீனா உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம், பத்தாண்டுகளுக்கும் மேலாக மிசோரத்தில் நடைபெற்று வந்த கிளர்ச்சி முடிவுக்கு வந்தது, ஏவுகணை வளர்ச்சி போன்றவையும் ராஜிவ் காந்தியின் தொலைநோக்கு  பார்வையால் நாட்டுக்கு கிடைத்தது. இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

Related Stories: