அணைகளில் நீரை தேக்கி ஒரே நேரத்தில் வெளியேற்றி என் வீட்டை தண்ணீரில் மூழ்கடிக்க முயற்சி: முன்னாள் முதல்வர் சந்திரபாபு பரபரப்பு குற்றச்சாட்டு

திருமலை: அணைகளில் நீரை தேக்கி ஒரே நேரத்தில் வெளியேற்றி என் வீட்டை தண்ணீரில் மூழ்கடிக்க முயற்சி செய்தனர் என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு பரபரப்பு குற்றம்சாட்டினார்.ஆந்திராவின் விஜயவாடாவில் கிருஷ்ணா நதி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட  கீதா நகர், பூபேஷ் குப்தா நகர்,  தாரகராமாநகர் ஆகிய இடங்களை முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நேற்று நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பொது மக்களிடம் பேசியதாவது:

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு எனது வீட்டை நீரில் மூழ்கடிக்க முயற்சி செய்தனர். ஆனால் எனது வீடு மூழ்கவில்லை.

இந்த வெள்ளப்பெருக்கு சாதாரணமாக வந்தது அல்ல. அணைகளில் இருந்து சில நாட்களுக்கு முன்னதாகவே  தண்ணீரை வெளியேற்றி இருந்தால் இந்த அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால் என் வீட்டை மூழ்கடிக்க வேண்டும் என அணைகளில் நீரை தேக்கி பின்னர் ஒரே நேரத்தில் வெளியேற்றியுள்ளனர். ஒருபுறம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்தை எதிர்க் கொண்டுள்ள நிலையில்  அவர்களை கண்டுகொள்ளாமல் எனது வீட்டையே சுற்றி சுற்றி வந்தபடி அமைச்சர்கள் இருந்தனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதுமேலும், அண்ணா கேன்டீன்களை எதற்காக மூடினார்கள் என்று தெரியவில்லை.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: