ஈரோடு, கோபி, சத்தி பஸ் நிலையங்களில் மாஸ் டிக்கெட் செக்கப்: பரிசோதகர்கள் அதிரடி

ஈரோடு: ஈரோடு, கோபி, சத்தி உள்ளிட்ட பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகளிடம் இன்று டிக்கெட் பரிசோதகர்கள் மாஸ் டிக்கெட் செக்கப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை கோட்டத்திற்குட்பட்ட அரசு பஸ்களில் ஒரே நேரத்தில் அனைத்து பஸ்களிலும் டிக்கெட் செக்கிங் செய்யும் வகையில் மாஸ் செக்கிங் சிஸ்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட ஈரோடு, கோபி, சத்தி உள்ளிட்ட பஸ் ஸ்டாண்டுகளுக்கு வந்த பஸ்களில் இருந்து இறங்கிய பயணிகளிடம் டிக்கெட் உள்ளதா?

என்பது குறித்து செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் டிக்கெட் பரிசோதனை செய்தனர். மண்டல துணை மேலாளர் (வணிகம்) நாகேந்திரன் தலைமையில் 60க்கும் மேற்பட்ட செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மற்றும் புறநகர், தொலைதூர பஸ்களில் பரிசோதனை நடைபெற்றது. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த பரிசோதனை நடைபெறும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: