நாமக்கல்லில் புதிய சட்டக் கல்லூரி வரும் 24-ம் தேதி திறக்கப்படுகிறது; அமைச்சர் தங்கமணி பேட்டி

நாமக்கல்: நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே நுழைவு பாலப் பணி, அரசு பொறியியல் கல்லூரி அமையவுள்ள இடத்தை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ஆய்வுசெய்தார். பள்ளிப்பாளையம் அருகே உள்ள காவேரி ரயில் நிலைய பகுதியில் ஏற்கெனவே உள்ள சிறு நுழைவுப்பாலத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் நிலவி வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்காத வகையில் அப்பகுதியில் புதிய நுழைவு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 22 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே நுழைவுப் பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே நுழைவு பாலப் பணிகளை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி ஆய்வுசெய்தார். பின்னர் பேட்டியளித்த அவர்; பாலத்தின் பணிகள் இன்னும் 2 மாதத்தில் முடிக்கப்பட்டு பாலமானது பொதுமக்களின் பயன்பாட்டுக்குவரும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். அதேபோல, பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர்: புதிய சட்டக் கல்லூரி வரும் 24-ம் தேதி காலை 11 மணிக்கு திறக்கப்படுகிறது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

புதிய சட்டக்கல்லூரிக்கான கவுன்சிலிங் நாளை முதல் நடைபெறும். 3-ம் ஆண்டு பட்டப் படிப்பு 80 பேர் மற்றும் 5-ம் ஆண்டு பட்டப்படிப்பு 80 பேர் என 160 பேருக்கான சேர்க்கை நடைபெறுகிறது. டாஸ்மாக் கடையின் பணி நேரத்தை படிப்படியாக குறைக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: