சிறைச்சாலைகளில் போதிய கவனிப்பு இல்லாததால் கைதிகள் மரணமடைவது ஆய்வில் தெரியவந்துள்ளது: துரைமுருகன் பேட்டி

மதுரை: சிறைச்சாலைகளில் போதிய கவனிப்பு இல்லாததால் கைதிகள் மரணமடைவது ஆய்வில் தெரியவந்துள்ளது என பொது கணக்குக்குழு தலைவர் துரைமுருகன் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதில் சில குறைபாடு இருப்பதை குழு கண்டறிந்துள்ளது. எந்த பொருளின் விலை கூடினாலும் பொதுமக்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள் என்றும் விலைவாசி கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமை என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

Advertising
Advertising

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அரசுப் பணிகள் குறித்து துரைமுருகன் தலைமையிலான சட்டமன்ற பொதுக் கணக்குக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. துரைமுருகனுடன் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அரசு மருத்துவமனை, ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், அன்னை சத்யா குழந்தைகள் காப்பகம், இளமனூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, அரசு இராஜாஜி மருத்துவமனை, மதுரை மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது. முன்னதாக மதுரை விமான நிலையத்தில் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Related Stories: