மீன்களைக் காப்பாற்ற பிளாஸ்டிக் ஷூ!

நன்றி குங்குமம்

‘‘இன்னும் முப்பது வருடங்களில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகமாக இருக்கும்...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு. 1964ம் ஆண்டில் தொடங்கிய பிளாஸ்டிக் பயன்பாடு, 2018ல் சுமார் 500 மில்லியன் டன்னாக உயர்ந்து நிற்கிறது! வேறு எதையும் விட கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகம்.

அமெரிக்கா மட்டுமே தினமும் 5 லட்சம் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைக் கடலில் குவிக்கிறது. கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து அதைப் பயன்படுத்த பல நாடுகள் திட்டமிட்டு வந்தாலும், வெறும் 14% பிளாஸ்டிக் கழிவுகளே இதுவரை மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில் காலணிகளுக்குப் புகழ்பெற்ற ‘அடிடாஸ்’ நிறுவனம் கடலில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து 10 லட்சம் ஷூக்களைத் தயாரித்துள்ளது!இந்தக் காலணிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Related Stories: