இரவுக் கிளி இருக்கிறதா இல்லையா..?

நன்றி குங்குமம்

மனிதனுடன் நெருக்கமாக இருக்கும் பறவை என்றால் அது கிளிதான்.  உலகில் சுமார் 400 இனங்களைச் சேர்ந்த கிளிகள் உள்ளன. அதில் அருகி வரும் ஓர் அரிய இனம்தான் இரவுக் கிளி.

மற்ற இனங்களைச் சேர்ந்த கிளிகளை விட இரவுக் கிளியின் உடலமைப்பு மிகச் சிறியது. யார் கண்ணிலும் அவ்வளவு சீக்கிரத்தில் அகப்படாது. அதனால் இதை மர்மப் பறவை என்றும் அழைக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் தட்பவெப்ப நிலையும், நிலப்பகுதியும் இரவுக் கிளிக்கு சாதகமாக இருப்பதால் அங்கே மட்டுமே இப்பறவை வசிக்கிறது.

இந்நிலையில் சுமார் 250 இரவுக் கிளிகள் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளதாக சொல்கிறார்கள். 1912 முதல் 1979 வரை ஓர் இரவுக் கிளி கூட யார் கண்ணிலும் படவில்லை. அதனால் இரவுக் கிளி அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். இரவுக் கிளி அழிந்துவிடவில்லை என்று உறுதியாக நம்பினார் வன உயிர்களைப் புகைப்படமெடுக்கும் கலைஞன் ஜான் யூங். இரவுக் கிளிக்காக 15 வருடங்களுக்கு மேல் ஆஸ்திரேலியா காடுகளில் சுற்றித்திரிந்தார்.

சுமார் 17 ஆயிரம் மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவர் கண்ணில் ஓர் இரவுக் கிளி அகப்பட்டது!இரவுக் கிளியை விருப்பம் போல புகைப்படம் எடுத்தும், 17 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவாகவும் பதிவு செய்தார். 2013ல் நடந்த இச்சம்பவம் விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. ஜான் யூங்கின் புகைப்படம் மற்றும் வீடியோதான் இரவுக் கிளி இருப்பதற்கான ஒரே சாட்சி.

கடந்த வருடத்தின் இறுதியில் அந்தப் புகைப்படத்தையும் வீடியோவையும் ஆராய்ந்த விஞ்ஞானிகள் ‘‘அது இரவுக் கிளியே அல்ல...’’ என்று ஜானைக் குற்றம்சாட்டினர். சமீபத்தில் இன்னொரு இரவுக் கிளி மேற்கு குயின்ஸ்லாந்தில் தரிசனம் தந்திருக்கிறது!அது இரவுக்கிளியா என்பதை விஞ்ஞானிகள் விரைவில் சொல்வார்கள்!

Related Stories: