அமெரிக்காவில் சுற்றுலா கப்பலிலிருந்து தவிறி விழுந்த மாற்றுத்திறனாளி பெண் மீட்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கப்பல் பயணத்தின் போது கடலில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி பெண்ணை உடனிருந்த சுற்றுலாப் பயணிகள் மீட்டெடுக்கும் காட்சியானது வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. விர்ஜின் தீவுகளில் உள்ள செயின்ட் தாமஸ் தீவு அருகே அண்மையில் சுற்றுலா கப்பல் ஒன்று சென்ற போது நீரோட்டத்தின் போக்குக்கு ஏற்ப திடீரென சரிந்து மீண்டுள்ளது. இதில் நிலை தடுமாறிய கப்பலில் இருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கடலில் தவறி விழுந்தார். இதனை பார்த்த கப்பலில் இருந்த சக சுற்றுலா பயணிகளான ரான்டால்ப் டொனோவன் மற்றும் கஷீஃப் ஹாமில்டன் ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்தில் நீரில் குதித்தனர்.

 இதனை தொடர்ந்து அந்த மாற்றுத்திறனாளி பெண் மீது வட்ட வடிவிலான மிதவையை இட்டு அவரை மீட்க முயன்றனர். தொடர்ந்து அவரது ஒரு கையில் கயிறு கட்டி கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் அவரை மேலே இழுக்க முற்பட்டனர். இறுதியாக பயணிகளின் கூட்டு முயற்சியால் மாற்றுத்திறனாளி பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை சாமர்த்தியமாக காயமின்றி மீட்டு கரை சேர்ந்த மற்றும் ரான்டால்ப் மற்றும் கஷீஃப் ஆகியோருக்கு கப்பலில் இருந்த சக பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். தற்போது இந்த காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இளைஞர்களின் மனிதாபிமான செயலை பலரும் பாராட்டுக்களை குவித்த வண்ணம் உள்ளனர்.

Related Stories: