1919 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் முதல் பயணிகள் விமானம் பயன்பாட்டுக்கு வந்து 100 ஆண்டுகள் நிறைவு

ஐரோப்பா: ஐரோப்பாவில் முதல் பயணிகள் விமானம் பயன்பாட்டுக்கு வந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2 பேர் மட்டுமே செல்லக்கூடிய முதல் ஐரோப்பிய பயணிகள் விமானம் 1919 ஆம் ஆண்டு பெர்லிங்கில் புறப்பட்டு ரஷ்யாவின் தேவவ் விமான நிலையத்தில்தான் இறங்கியது. இதை சிறப்பிக்கும் விதமாக ரஷ்யாவின் தேவவ் என்ற இடத்தில் 50-க்கும் மேற்பட்ட சிறிய விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த பழமையான விமான தளத்தில் ஜெர்மனி, ஸ்வீடன், போலந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் விமான உரிமையாளர்களும், விமானிகளும் ஒன்று கூடி, தங்கள் விமான சாகச அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

2 பேர் மட்டும் செல்லக்கூடிய ஏராளமான சிறிய விமானங்கள் ஒரே இடத்தில் காட்சியப்படுத்தப்பட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நூற்றாண்டு நிகழ்ச்சியில் விமான சாகசங்களும் நிகழ்த்தப்பட்டன. பொதுமக்கள் விமானத்துக்குள் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

Related Stories: