கொலை செய்தால் சொத்து கிடைக்காது

ஓர் இந்துப்பெண்மணி உயில் எதுவும் எழுதிவைக்காமல் இறந்து போனால் அவருடைய சொத்துக்களின்மீது யாருக்கெல்லாம் உரிமை உள்ளது என்பது குறித்து இந்து உரிமைச்சட்டம் பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளது. இதன்படி இவருடைய சொத்துக்கள் இறந்தவரின் மகன், மகள், கணவன் ஆகியோரைச் சென்றடையும்.

Advertising
Advertising

மகன்,மகள் முன்னதாக இறந்திருந்தால் அவர்கள் வழி மகன், மகளுக்கும், கணவருடைய வாரிசுதாரர்கள், தாய்-தகப்பனார், அப்பாவின் வாரிசுதாரர்கள், தாயாரின் வாரிசுதாரர்கள் ஆகியோர்க்கும் இச்சொத்தில் உரிமை உண்டு. இதே போல் கொலை செய்யப்பட்டவரின் சொத்து கொலை செய்தவர்களுக்கோ, கொலைக்கு உடந்தையாக இருந்த உரிமைதாரர்களுக்கோ போய் சேராது. இது நேர்மை, நெறி, ஒழுக்கம் இவற்றின் அடிப்படையில் விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து உரிமைச்சட்டத்தின் 25வது விதிகளில் விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: