தமிழகத்தில் டெங்கு குறித்து பயம் வேண்டாம்: பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை

சென்னை: தமிழகத்தில் பரவலாக மழை பெய்திருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பிற வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் மத்தியில் அச்சம் எழ தொடங்கியுள்ளது. டெங்கு பற்றி மக்கள் தேவையில்லாத அச்சங்கள் கொள்ள தேவையில்லை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் பரவலாக மழை பெய்து ஓய்ந்திருக்கும் நிலையில் குழந்தைகளுக்கு காய்ச்சல் தொற்ற அதிக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலே டெங்குவோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழ தொடங்கிவிட்டது. இதை தொடர்ந்து டெங்குவாகவே இருந்தாலும் பயப்பட வேண்டாம் எனவும், அது சாதாரண காய்ச்சலை போன்று தான் என்று குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் ஏற்படும் போது தேவையற்ற சிகிச்சை முறைகளையும், தற்சார்பு மருத்துவம் போன்றவற்றை தவிர்ப்பதே சிறந்தது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதை அடுத்து வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் டெங்குவை தடுக்க எளிய வழி எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வயதுக்கும் குறைவான வயதில் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கூடுதல் கவனமும், கொசுக்கடியில் இருந்து தப்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் எனவும், முக்கியமாக படுக்கை அறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து டெங்கு பற்றி பயப்படுவதை விட எதிர்கொள்வது மிகவும் எளிது என்பதால் தேவையற்ற வதந்திகளை நம்ப அவசியம் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Stories: