சென்னையில் கடல் அலைகள் நீல நிறத்தில் ஜொலித்தது ஏன் :கடல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்

சென்னை : சென்னையின் கடல் அலைகள் நீல நிறத்தில் ஜொலித்தது ஏன் என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. திருவான்மியூர், ஈஞ்சம்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக கடல் அலைகள் நீல நிறத்தில் காட்சி அளித்தது. கடல் அலைகளை மக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். இரவு நேரத்தில் கடல் அலைகள் நீல நிறத்தில் ஜொலித்தது ஏன் என்பது பற்றி கடல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.  

இத்தகைய நீல நிறம் வெளிச்சத்திற்கு டைனோஃப்ளேஜலேட் என்று சொல்லக்கூடிய கடல் நுண்ணியிர் தாவரம் தான் காரணம் என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு இயற்கையான நிகழ்வு தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக தாவரங்கள் கடலில் வாழக்கூடிய பூச்சிகள், மீன்களுக்கு அடிப்படை உணவாக இருந்து வருகிறது. அதன்படிடைனோஃப்ளேஜலேட் தாவரங்கள் கோடிக்கணக்கில் கடல் நீரில் காணப்படுகின்றவை.

இந்த நுண்ணுயிர் தாவரங்கள் பளீர் என்று நீல நிறத்தில் வெளிச்சம் தரக்கூடியவை. இவ்வகையான தாவரங்களை தொந்தரவு செய்தால், தன்னுடைய உடம்பில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. ஆனால் பகல் நேரத்தில் சூரிய ஒளிப் படுவதால் அந்த நீல நிற ஒளி கண்களுக்கு தெரியாது. இந்த நடைமுறை ஒரு வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரை நீடிக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நிறம் உமிழ் நடவடிக்கை தொடரும் வரையில் கடல் உணவுகளை தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: