×

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள சந்திரயான்-2 விண்கலம் முக்கிய மைல் கல்லை எட்டியது...இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

பெங்களூரு: சந்திராயன்-2 காலை 9 மணியளவில் முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திரனின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் கடந்த மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 16 நிமிடங்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அது சென்றடைந்தது. சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சியினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையே, புவி சுற்றுவட்டப்பாதையில் வந்து கொண்டிருந்த விண்கலம் ஜூலை 23-ம் முதல் ஆகஸ்டு 6-ம் தேதி வரை 5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் 14ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவியீர்ப்பு விசையை விட்டு வெளியே சென்று, நிலவை நோக்கி பயணித்தது. இந்நிலையில் இன்று புவி வட்ட பாதையை விட்டு வெளியேறிய சந்திரயான் 2 விண்கலம், இன்று காலை நிலவின் வட்டப்பாதையை சுற்றத்தொடங்கியுள்ளது.

சந்திரயான் 2 தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான்-2 விண்கலம் இன்று காலை 9.02 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது என்றார். மேலும், சந்திரயான்-2-ல் அனுப்பப்பட்டுள்ள வாகனம் நிலவின் தென் துருவத்தில் இறங்கவுள்ளது என்றும் சந்திரனை 18 ஆயிரம் கி.மீ. உயரத்தில் சந்திரயான்-2 விண்கலம் தற்போது சுற்றி வருகிறது என்றார். ஆகஸ்ட் 14-ம் தேதி புவி சுற்றுப்பாதையில் இருந்து நிலவை நோக்கி செலுத்தப்பட்டது என்றார். செப்டம்பர் 2-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வாகனம் பிரிந்து நிலவை சுற்றத் தொடங்கும், விக்ரம் லேண்டர் வாகனம் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரை இறங்கும் என்றும் தெரிவித்தார்.


Tags : Chandrayaan-2: Milestone reached the main orbit of the Moon ... Interview with ISRO President Shiva
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...