ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 4 பேர் இந்தியாவுக்குள் நுழைவு: ராஜஸ்தான், குஜராத் எல்லை பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு

அகமதாபாத்: நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 பேர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என உளவுத் தகவல்கள் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து,  அதை 2  யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு சமீபத்தில் பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இந்திய எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. சுதந்திர தினத்தன்று இந்தியாவுக்குள் ஊடுர முயன்ற  பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

இந்நிலையில், ஐஎஸ்ஐ ஏஜன்ட் உள்ளிட்ட 4 பேர் இந்தியாவுக்குள் நுழைந்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உஷாராக இருக்குமாறு   அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்திய நகரங்களில் தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் மக்கள் பற்றிய விபரங்களை தெரிவிக்குமாறு அனைத்து மாநில போலீசாருக்கும் குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை போலீசார் வேண்டுகோள்  விடுத்துள்ளனர். மேலும், ஜூலை 15- க்கு பின் இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தானியர் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கவும் குஜராத் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராஜஸ்தான் சிரோஹி காவல்துறை கண்காணிப்பாளர் கல்யாண்மால்மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் குழு பாஸ்போர்ட்டுகளில் ஐ.எஸ்.ஐ 3 அல்லது 4 பேர் இந்தியாவுக்குள் நுழைந்தனர், இதன் காரணமாக ராஜஸ்தான்  மற்றும் குஜராத் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அலர்ட் கடிதம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பி வைக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஓட்டல்,  பஸ் நிலையங்கள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடுமையான சோதனை நடத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: