பெட்டிகள் இல்லாமல் 5 கி.மீ தூரம் தனியாக ஓடிய ரயில் எஞ்சின்! : தொடரி திரைப்பட பாணியில் வினோத சம்பவம்

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் ரயில் எஞ்சின் பெட்டிகளில் இருந்து பிரிந்து 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு தனியாக ஓடியது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து செகந்திராபாத் நோக்கி விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது செக்கந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள துனே அருகே சென்றுக் கொண்டிருந்த போது, ரயில் எஞ்சின் பெட்டிகளில் இருந்து கழன்றது. 5 கிலோ மீட்டர் தூரம் பெட்டிகள் இல்லாமல் ரயில் எஞ்சின் ஓடியது.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பயணிகள், ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பெட்டிகளை நடுவழியில் நிறுத்தினர். இதனால் பெட்டிகள் அனைத்தும் நக்கப்பள்ளி மற்றும் நர்சிபட்னம் சாலை ரயில் நிலையம் இடையே நின்றன. இதையடுத்து பெட்டிகள் தனியாக இருப்பதை பயணிகள் ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து ரயில் ஓட்டுநருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர் பெட்டிகளில் இருந்த பிரிந்த எஞ்சினை மட்டும் ஓட்டிச் செல்வதை அறிந்த ரயில் எஞ்சின் ஓட்டுநர் 5 கிமீ தொலைவு வரை எஞ்சினை பின்னால் ஓட்டி நர்சிபட்னம் பகுதிக்கு வந்தார். ரயில் எஞ்சின் வந்து சேர்ந்த பின் பெட்டிகளுக்கும் எஞ்சினுக்கும் இடையே உள்ள இணைப்பு சரி செய்யப்பட்டு ரயில் தொடர்ந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுச் சென்றது. இதன் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக ரயில் இயக்கப்பட்டது.

Related Stories: