முதலமைச்சர் சிறப்பு குறைதீர்வு திட்டம்: ஒரே நாளில் 4,062 மனுக்கள் பெறப்பட்டு, 53 மனுக்களுக்கு உடனடி தீர்வு

சேலம்: முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்டம் மூலமாக ஒரே நாளில் 4,062 மனுக்கள் பெறப்பட்டு அதில் 53 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக முதலமைச்சரிடம் தெரிவிக்க ஏதுவாக முதலமைச்சர் சிறப்பு குறைதீர்வு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அதன் தொடக்க விழாவானது சேலம் மாவட்டம் வனவாசியில் நடைபெற்றது. திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏராளமானோரிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் மனுக்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இதை தொடர்ந்து முதலமைச்சர் சிறப்பு குறைதீர்வு கூட்டம் மூலம் தங்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது என பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

இதை அடுத்து தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர்கள் தெரிவித்தனர். எனினும் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். முதலமைச்சர் சிறப்பு குறைதீர்வு திட்டத்தில் ஒரே நாளில் 4,062 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 53 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் இந்த சிறப்பு திட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்திருப்பது மனுதாரர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

Related Stories: