சட்டீஸ்கரில் விடுதியில் பெண்ணை தர, தரவென்று இழுத்து சென்று வெளியேற்றிய கொடூரம்

பிலாஸ்பூர்: சட்டீஸ்கரில் பெண் ஒருவரை விடுதியை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய விவகாரத்தில், உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின்பேரில் பெண் விடுதி கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சட்டீஸ்கரில் உள்ள  பெண்கள் தங்கும் விடுதியின் கண்காணிப்பாளராக சுமிலா சிங் இருந்து வந்தார். அங்கு பெண் ஒருவர் தனது 3 மாத குழந்தையுடன் தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி சுமிலா சிங்கின் கணவர் ரங்லால் சிங், அந்த பெண்ணை  அறையில் இருந்து தர, தரவென்று இழுத்து சென்று வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து மறுநாள் கண்காணிப்பாளர், அவரது கணவர் மீது எப்ஐஆர் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே பழங்குடியினர் நலத்துறை, மகளிர் காங்கிரஸ் குழுக்கள் அந்த பெண்ணை கடந்த ஞாயிற்றுக்கிழமை  சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தன. விடுதி கண்காணிப்பாளர் சுமிலா சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். லீலாவதி என்பவர் விடுதியின் புதிய கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண், கோரியா  மாவட்டத்தில் ஜனக்பூர் பகுதியில் உள்ள பர்வானி பெண்கள் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: