ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இந்தியா லெவன் அணி வலுவான முன்னிலை பெற்றது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஆன்டிகுவா, நார்த் சவுண்டு மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா லெவன் விளையாடியது. ஆன்டிகுவா, கூலிட்ஜ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன் என்ற முதல் நாள் ஸ்கோருடன் டிக்ளேர் செய்செய்தது. புஜாரா 100*, ரோகித் 68 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு சுருண்டது (56.1 ஓவர்). கவெம் ஹாட்ஜ் 51, கார்ட்டர் 26, கேப்டன் ஹாமில்டன் 33 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர்.