வாணியம்பாடியில் பயங்கர சத்தம் நில அதிர்வு பீதியில் மக்கள்: தெருக்களில் தஞ்சம்

வாணியம்பாடி: வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கபூராபாத், வேப்பம்பட்டு, ஜனதாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மதியம் 3 மணியளவில் வெடி வெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது.  அப்போது வீடுகளில் இருந்த  பொருட்கள் சிதறி கீழே விழுந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என பீதியடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `திடீரென வெடிச்சத்தம் போன்று பெரும் சத்தம் கேட்டது. அப்போது எங்கள் வீடுகளில் நில அதிர்வு ஏற்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தது. இம்மாதிரியான நிகழ்வு வாணியம்பாடியில் 15  ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது. இது நில அதிர்வா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவில்லை’’ என்றனர்.   மேலும், வாணியம்பாடியில் பல்வேறு குவாரிகளில் காலை அல்லது மாலை நேரங்களில் மலை பாறைகளை உடைப்பதற்கு வெடிவைப்பது வழக்கம். அப்போது, வெடி சத்தம் கேட்கும். ஆனால், தற்போது வழக்கத்துக்கு மாறாக மதியம் 3  மணியளவில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டு நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

Related Stories: