×

அனைவருக்கும் சொந்த வீடு புதிதாக 5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம்: அனைவருக்கும் சொந்த வீடு, 5 லட்சம் முதியோருக்கு புதிதாக ஓய்வூதியம் வழங்கப்படும் என்று சேலத்தில்  நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழக  முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் தொடக்கவிழா சேலம்  மாவட்டம் நங்கவள்ளி, இடைப்பாடி, ெகாங்கணாபுரம் பகுதிகளில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு முகாமை தொடங்கி  வைத்து பேசியதாவது: தமிழகம்  முழுவதும் மக்களின் குறைகளை தீர்க்க நேரடியாக கிராமங்கள், நகரங்களில் உள்ள  வார்டுகளுக்கு சென்று மக்களிடம், கோரிக்கை மனுக்கள் பெற்று நிவர்த்தி செய்ய  ‘முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்’ திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி மற்றும்  பிற துறை அலுவலர் குழு அமைக்கப்பட்டு,அக்குழுவினர் குறிப்பிட்ட நாளில்  மனுக்களை பெற்று, ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்வதே இதன் சிறப்பம்சமாகும். மனுக்களுக்கு ஆகஸ்ட்  மாத இறுதிக்குள்  அதிகாரிகள் தீர்வு காண்பார்கள். தமிழகத்தின் 234  சட்டமன்ற ெதாகுதிகளுக்கும் திட்டங்களை நான் செயல்படுத்த வேண்டும். அதே  ேநரத்தில் இடைப்பாடி தொகுதியில் இருந்து என்னை மக்கள் தேர்ந்ெதடுத்து,  முதல்வராகும் வாய்ப்பை வழங்கியுள்ளனர். அதனால் இந்த  தொகுதியில் சிறப்பு  கவனம் செலுத்துகிறேன்.  கடந்த 2011 தேர்தலின்போது இந்த தொகுதி மக்களுக்கு  கொடுத்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி விட்டேன்.

ஒவ்வொரு கிராமத்திற்கும்  சுகாதாரத்துறை நேரடியாக சென்று, மக்களை பரிசோதித்து குணப்படுத்தும் அரசாக  உள்ளது. இதனால் மருத்துவத்துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதேபோல்  விவசாயிகளுக்கான  திட்டங்களை செயல்படுத்துவதிலும் அதிக அக்கறை செலுத்தி  வருகிறோம். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று விவசாயிகள் விரும்பும்,  கால்நடைகளை பெறுவதற்காக ₹48 கோடியில் ஊட்டியில் ஆராய்ச்சி மையம்  அமைக்கப்படவுள்ளது.  விவசாயிகள் என்ன நினைக்கிறார்களோ, அதை நிறைவேற்றித் தரும்  அரசாக, இந்த அரசு உள்ளது. நான் மட்டுமல்ல, நமது தலைமை செயலாளரும் விவசாயி  என்பதால் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படுகிறது.மேலும், அனைத்து  தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதன்  ஒரு பகுதியாகவே வருவாய்த்துறை சார்பில் தற்போது மாநிலம் முழுவதும் சிறப்பு  குறைதீர்க்கும் முகாம் அமலுக்கு வந்துள்ளது. அரசு கொண்டு வரும் திட்டங்களை  அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்துவது பாராட்டுக்குரியது. அரசும்,  அதிகாரிகளும் ஒரு வண்டியின் இரு சக்கரங்களை போன்றவர்கள். இருவரும் ஒரே  நேர்கோட்டில் சென்றால்தான் திட்டங்களை சிறப்பாக  செயல்படுத்த முடியும்.

நான்  முதல்வர் பொறுப்புக்கு வந்தபோது 2 மாதம், 6 மாதம்,ஒரு வருடம் இந்த ஆட்சி  நிலைக்கும்  என்றார்கள். ஆனால் மக்களின் அன்பினாலும்,ஆதரவாலும்,அதிகாரிகளின் ஒத்துழைப்பாலும் 3 வருடமாக ஆட்சியை நடத்திக்  கொண்டிருக்கிறோம். கிராமங்கள் மட்டுமல்ல,நகர்ப்புற மக்களும் மேம்பட வேண்டும் என்பதே இந்த  ஆட்சியின் இலக்கு. வீடு இல்லாதவர்களுக்கு ேபரூராட்சி பகுதிகளில்  அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பட்டா இல்லாத  அனைவருக்கும் பட்டா வழங்கவும்,வீட்டுமனை இல்லாதவர்களுக்கு  வீட்டுமனை வழங்கவும்,  அனைத்து ஏழை மக்களுக்கும் சொந்த வீடு வழங்குவதற்கும் நடவடிக்ைககள் ேமற்கொள்ளப்பட்டு வருகிறது.வயது முதிர்ச்சியால் உழைக்க முடியாத  முதியோர்களுக்கு முதியோர் உதவித் திட்டத்தை அம்மாவின் அரசு செயல்படுத்திக்  கொண்டிருக்கின்றது. இதன் மூலம், புதிதாக,தகுதியான 5லட்சம்  முதியோர்களுக்கு  ஓய்வூதியம்  வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கூட்டத்துக்குள் புகுந்த பாம்பு
இடைப்பாடி அருகேயுள்ள செட்டிமாங்குறிச்சியில் உள்ள புது ஏரியில் குடிமராமத்து பணி நடக்கிறது. இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். முன்னதாக அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில், ஒரு அடி நீளமுள்ள பாம்பு  புகுந்தது.  மக்கள், பாம்பை விரட்டியடித்தனர். அது மண்ணுக்குள் புகுந்து தப்பியது.

இடைப்பாடி மக்கள் கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தேன்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், இப்பகுதியில் தொழிற்சாலை வேண்டும் என ேகட்டீர்கள், எட்டுகுட்டைமேட்டில் 1000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் சிட்கோ மூலம் தொழிற்சாலை துவங்கப்பட்டுள்ளது.  இடைப்பாடியில் கலைக்கல்லூரி வேண்டும் என்றீர்கள். அதனையும் நிறைவேற்றி கொடுத்துள்ளேன். பிஎட் கல்லூரியும் துவங்கப்பட்டுள்ளது. நீங்கள் கேட்டதையெல்லாம் கொடுத்துள்ளேன் இறுதியாக இடைப்பாடியில் நீதிமன்றத்தையும் துவங்கி  வைத்துவிட்டேன் என்றார்.

Tags : own home,pension scheme,Salem ,Chief Minister ,Edappadi Palanisamy
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...