டாஸ்மாக் இளநிலை உதவியாளர் தேர்வுக்கான கீ-ஆன்சர் வெளியீடு: கருத்து தெரிவிக்க இன்று கடைசி

சென்னை: டாஸ்மாக்கில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் பணி தேர்விற்கான கீ-ஆன்சரை நிர்வாகம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொகுதிப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்தில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் பணிக்கு  தேர்வு நடத்தி பணி வழங்க நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, இத்தேர்விற்கு 8 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்தனர். இதேபோல், தேர்விற்கு விண்ணப்பத்தவர்களுக்கு  டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் அதிகாரிகளை நியமித்து சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இளநிலை உதவியாளர் தேர்வு சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய 5 மண்டலங்களில் உள்ள 9 மையங்களில் நேற்று முன்தினம் நடந்தது. இத்தேர்வை 8 ஆயிரத்து 401 பேர் எழுதினர். 325 பேர் தேர்வு  எழுதவில்லை. இந்த தேர்விற்கான கீ-ஆன்சரை டாஸ்மாக் நிர்வாகம் அதன் இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. மேலும், விண்ணப்பதாரர்கள் விடைக்குறிக்கான தங்களது கருத்துக்கள் அல்லது ஆட்சேபனை இருப்பின் அதனை ஆகஸ்ட் 20ம்  தேதிக்குள் (இன்று) tasmacrecruitmentja2019@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: