10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று வெளியாகிறது

சென்னை: பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகளை தேர்வுத்துறை இன்று மதியம் இணைய தளத்தில் வெளியிடுகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் சிறப்பு துணைத் தேர்வு நடந்தது. அதில் 40 ஆயிரத்து 771 பேர் எழுதினர். தேர்வு முடிவுக்கு பிறகு சந்தேகம் இருப்பதாக கூறி  920 பேர் மறு கூட்டல் வேண்டி விண்ணப்பித்தனர்.

அந்த விண்ணப்பத்தின்பேரில் 1898 விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன. அதில் 33 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் வந்துள்ளது. மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின்  விவரங்கள் scan.tndge.in என்ற இணைய தளத்தில் இன்று பிற்பகல் வெளியாகிறது. 33 பேர் தவிர மற்றவர்களுக்கு மதிப்பெண்களில் எந்த மாற்றமும் இல்லை. மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றுகள் இன்று  பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Related Stories: