சர்ச்சை பேச்சு திருவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன்

திருவில்லிபுத்தூர்: சர்ச்சையாக பேசியது தொடர்பாக திருவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயர் சடகோப ராமானுஜர் கடந்த மாதம் அளித்த பேட்டியில், ‘‘அத்திவரதரை குளத்தில் வைக்கக்கூடாது. கடந்த காலங்களில் இஸ்லாமியர்களுக்கு பயந்து வைத்தனர்’’ என  தெரிவித்திருந்தார்.இந்த பேட்டியில் மத உணர்வை புண்படுத்தியதாக கூறி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இந்திய தவ்ஹித் ஜமாத் மாவட்ட செயலாளர் சையது அலி, முதல்வரின் தனிப்பிரிவிற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். புகாரின்பேரில் திருவில்லிபுத்தூர்  நகர் போலீசார், ஜீயருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். சம்மனில், வரும் 22ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென  கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜீயர் சடகோப ராமானுஜர் சார்பில், திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் நேற்று விஷ்வ இந்து பரிஷத் மாநில இளைஞரணி செயலாளர் சரவணகார்த்திக் ஆஜராகி பல்வேறு விளக்கம் கொடுத்தார். மேலும் போலீசார்  கேட்கும்போது தேவையான ஆதாரங்களையும் கொடுப்பதாக தெரிவித்தார். பின்னர் ஜீயர் மடம் சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

Related Stories: