தோஹா ஆசிய தடகள ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஆரோக்கிய ராஜீவுக்கு 5 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தோஹா ஆசிய தடகள ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தரும் வகையில் தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வலிதியூரைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ்வை ஊக்குவித்து-உற்சாகப்படுத்தும் வகையில், திமுக சார்பில், ஐந்து லட்ச ரூபாய்  நிதியுதவி அளிக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

இதற்கிணங்க, நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், தோஹா ஆசிய தடகள ஓட்டப் பந்தயப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை நேரில் பெற்று கொண்டார்.அப்போது பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: