மாநிலங்களவை எம்.பி.யாக மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வு

ஜெய்ப்பூர்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி மதன் லால் சைனி இறந்ததையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பாஜ சார்பில் எந்த வேட்பாளரும் நிறுத்தப்படவில்லை. வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது.

இதையடுத்து மாநிலங்களவை எம்.பி.யாக மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அசாம் மாநிலத்திலிருந்து தொடர்ந்து 4 முறை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங், இந்த முறை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்த தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: