3000 ரயில் நிலையங்களுக்கு இலவச வை-பை

புதுடெல்லி: ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை வழங்கும் சேவையை கடந்த 2016ம் ஆண்டு ரயில்வே அறிமுகப்படுத்தியது. முதல் முதலாக மும்பை ரயில் நிலையத்தில் இந்த இலவச வை-பை வசதி தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 16 மாதங்களில் 1,600 ரயில் நிலையங்களுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 3ம் தேதி ராஜஸ்தானின் ரானா பிரதாப் நகர் ரயில் நிலையம் 2000-வது ரயில் நிலையமாக இலவச வை-பை வசதியை பெற்றது. இதனைத் தொடர்ந்து 15 நாட்களில் 1,000 ரயில் நிலையங்களுக்கு வை-பை வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3000-வது ரயில் நிலையமாக ராஜஸ்தானின் எல்லினாபாத் ரயில் நிலையம் இலவச வை-பை சேவையை பெற்றுள்ளது. 6000 ரயில் நிலையங்களுக்கு இலவச வை-பை வசதி வழங்குவதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்வேயின் ரயில்டெல்  பிரிவு  இந்த பணியை முடிக்கும் வகையில் டாடா டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.

Related Stories: