×

அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார சரிவு வரும் : நிபுணர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ‘நாபே’ என்ற பொருளாதார ஆய்வு அமைப்பு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பொருளாதார ெகாள்கையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இன்னொரு பக்கம் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை குறைத்து வருகிறது.   மேலும், சீனாவுடன் வர்த்தக போர் நடத்துவது தேவையற்ற பொருளாதார குழப்ப சூழ்நிலையை அதிகரிக்கும்.   

சீனாவின் 30 ஆயிரம் கோடி டாலர் பொருட்கள் மீது மேலும் 10 சதவீத வரியை திணித்துள்ளார் டிரம்ப். இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நிலை நீடித்தால் பத்தாண்டுக்கு முன்பு வந்தது போல மீண்டும் அடுத்தாண்டு பொருளாதார சரிவை அமெரிக்கா சந்திக்கும்.  இவ்வாறு அறிக்கை கூறுகிறது.

Tags : US economic, downturn,experts warn
× RELATED கல்வி, பொருளாதாரத்தில் மேன்மை அடைந்த...