தமிழர் மீது தாக்குதல் நடத்தியவர் இலங்கை ராணுவ தளபதியாகிறார்

கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில், மனித உரிமை செயல்களில் ஈடுபட்ட ராணுவ கமாண்டர், தற்போது இலங்கை ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ராணுவத்தின் தற்போதைய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் செனாநாயகேயின் பதவிக் காலம் முடிகிறது. இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இதனால் இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா(55) என்பவரை அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இவர் கடந்த 2009ம் ஆண்டு, விடுதலைப்புலிகளுடன் இறுதிக்கட்டப் போர் நடந்தபோது, ராணுவத்தின் 58வது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

இவரது படையில் இருந்த ராணுவத்தினர் இலங்கை தமிழ் மக்கள் மீதும், அவர்கள் தங்கியிருந்த மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தினர். இறுதிக்கட்டப் போரில், அப்பாவி தமிழர்கள் 45 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். பிடிபட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான முறையில் அனுப்பட்ட உதவிகளையும் தடுத்து நிறுத்தினார். மனித உரிமைகளை மீறியதாக ஐ.நா மனித உரிமை கவுன்சில், கடந்த 2013ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தில், லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ராணுவ அதிகாரியை, ராணுவ தளபதியாக அதிபர் சிறிசேனா நியமித்துள்ளார்.

Related Stories: