2022ம் ஆண்டுக்குள் நாடாளுமன்றத்துக்கு புது கட்டிடம்: மோடி உறுதி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 36 இரண்டடுக்கு வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். புதிய எம்பிகளுக்காக நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதியில் 36 இரண்டடுக்கு வீடுகள் கட்டப்பட்டு வந்தது. இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், இதனை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மக்களவை  சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை  அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய மோடி, புதிய நாடாளுமன்றம் கட்டப்பட வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை துணை மாநிலங்களவை தலைவர்  வெங்கையா நாயுடு, மக்களவை  சபாநாயகர் ஓம் பிர்லா என்னிடம் கூறினர். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022ம் ஆண்டிற்குள் புதிய நாடாளுமன்றம் கட்டப்படும். எம்பிக்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கொண்டதாக இது உருவாக்கப்படும். இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது’’ என்று கூறினார்.

Related Stories: