பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா மறைவு தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா நேற்று காலமானார். .பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா (82). அவர் பீகாரின் 14வது முதல்வராக, 1975 முதல் 1990 வரையிலான காலத்தில் 3 முறை பதவி வகித்துள்ளார். முதுமை காரணமாக ஏற்படும் நோய்களால், கடந்த சில நாட்களாக  அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.  சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.

Advertising
Advertising

அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி, பீகார் முதல்வரும்,  ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: