மத்திய அமைச்சர்களிடம் தமிழக நிலவரம் குறித்து பேசினேன் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

புதுடெல்லி: மத்திய அமைச்சர்களிடம் தமிழக நிலவரம் குறித்து பேசப்பட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்த பிறகு டெல்லியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று டெல்லி சென்றார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போலிரியாலை சந்தித்தார். இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனையும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு மத்திய அரசு தரப்பில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாநிலத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு துறையில் சிறந்த மாணவர்களை உருவாக சுமார் ரூ.64 கோடியே 72 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையை பொருத்தமட்டில் ரூ.28ஆயிரத்து 957 கோடியே 62லட்சம் கூடுதலாக நிதிகள் வழங்கி மாணர்களின் எதிர்காலத்தை கருதி அதற்கான பணிகள் நடைமுறையில் இருந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: