டெல்லியில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 36 புதிய வீடுகள்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக கட்டப்பட்டுள்ள 36 புதிய வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதிதாக நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் டெல்லி வருகையில் குடியிருப்புகள்  கிடைப்பதற்கு கடினமாகவுள்ளது. ஏற்கனவே, உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவி காலம் முடிந்தப்பின்னர் காலி செய்த சென்ற பின்னர்தான் அவர்களுக்கு புதிய குடியிருப்பு அளிக்க முடியும், இதில் தாமதம் ஏற்படுகிறது.  இடைக்காலத்தில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்குவதற்கு இடவசதி குறைவாகவே உள்ளது. ஆகவே, டெல்லி நார்த் அவன்யூ சாலையில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகே பழைய வீடுகளுக்கு பதிலான புத்தம் புதிய 36 வீடுகள்  கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய 36 வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இதற்கிடையே, 17-வது நாடாளுமன்றத்திற்கு தேர்வான எம்பிக்களில் சுமார் 260  பேர் புதியவர்கள். புதிதாக தேர்வான எம்பிக்கள் பலர் தற்போது நட்சத்திர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புதிதாக திறக்கப்பட்டுள்ள 36 வீடுகளும் புதிதாக தேர்வான எம்.பி.க்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அதனைபோன்று சவுத்  அவன்யூ சாலையிலும் உள்ளிட்ட வேறு இடங்களிலும் புதிதாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடு கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளில் அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: