சேலத்தில் அரசு சட்டக் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சேலம்: சேலத்தில் அரசு சட்டக் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். புதிய சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 80 பேர், 3 ஆண்டு படிப்புக்கு 80 பேரை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை அரசு சட்டக்கல்லூரியின் முதல்வர் கோபாலகிருஷ்ணன் சேலம் கல்லூரி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் திறக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. புதிய சட்டக் கல்லூரிக்கான கட்டிடம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories: