அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்தின் நீரால் நிரப்ப வேண்டாம்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்தின் நீரால் நிரப்ப வேண்டாம் என ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள குளத்தை தூர்வார வலியுறுத்தி அசோகன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்திருந்தார். ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீரைக்கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அத்திவரதர் குளம் தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


Tags : Idol statue, Ananthasaras, Pottamaramai Pond, Do not fill, Icort Instruction
× RELATED ஆற்காடு அருகே வேணுகோபால் சுவாமி...