ஏர் பஸ் விமானம் வாங்கியதில் முறைகேடு: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது ஏர் பஸ் விமானங்கள், ஏர் இந்தியா நிறுவனத்திற்காகவும் முன்பு இந்தியா ஏர்லைன்ஸ் என்ற பெயரிலே செயல்பட்டு ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட இந்தியா ஏர்லைன்ஸ் நிறுவனதுக்காக்கவும் வாங்கப்பட்டன. இந்த விமானங்களை வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ.மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தீபக் சல்வார் என்று சொல்லப்படும் இடைத்தரகர் ஒருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது.

அதை தொடர்ந்து ஏர் பஸ் விமானங்களை வாங்கியதில் அப்போது யாருக்கெல்லாம் முக்கியமான பங்கு போனது என்று விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆலோசனை செய்து கொண்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. ஆகவே வரும் 23-ம் தேதி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பபட்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த வழக்கின் விசாரணை தற்போது ஆரம்பக்கட்டத்திலிருந்து நடைபெற்றுக் கொண்டிருகிறது. ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பலர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்கள். இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்தார். முந்தைய யு.பி.ஏ. அரசாட்சி நடந்த முனைப்பிலே மற்றொரு முக்கியமான கொள்முதலில் தற்போது ஊழல் ஏற்பட்டுள்ளதாக விசாரணை நடக்கிறது.

அதை தொடர்ந்து அமலாக்கத்துறை அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த உள்ளனர். ஆனால் அப்போது குரூப் ஆப் மினிஸ்டர்கள் என சொல்லப்படும் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் எவ்வளவு விமானங்கள் வாங்க வேண்டும், எந்தெந்த விமானங்களை வாங்க வேண்டும் என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து பிறகு இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு தற்போது ஏர் இந்தியா என்ற பெயரிலே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

கடுமையான நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியாவுக்கு கிட்டத்தட்ட ரூ.50,000 கோடி கடன் இருக்கிறது. இதெற்கெல்லாம் ஒரே முக்கிய காரணம் அப்போது அதிக அளவில் விமானம் வாங்கப்பட்டதே ஆகும். தேவை இல்லாத அளவுக்கு விமானம் வாங்கியதாலும், அதிக விலையில் வாங்கியதாலும் இந்த அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தான் தகவல் சிக்கலில் ஏர் இந்தியா தத்தளிக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. பணம் இழப்பு தொடர்பாகத்தான் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: