×

மழைநீர் சேமிப்பு அமைப்பை முறைப்படி செய்ய வேண்டும்: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை : தொழில் நிறுவனங்கள் , வணிக வளாகங்கள் , வீடுகள் என அனைத்து கட்டிடங்களிலும் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் மழைநீர் சேமிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடைபெற்ற மழைநீர் சேமிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.  

நீர்நிலைகள் குளங்கள் சுற்றியுள்ள கட்டிடங்கள் சேகரிக்கப்படும். மழைநீர் நேரடியாக அதனுள் செல்ல வேண்டும். அதேபோல் மழையின் பரப்பளவிற்கு ஏற்ப இன்னும் மூன்று மாத காலத்திற்குள் மழைநீர் சேமிப்பு அமைப்பு நிறுவ வேண்டும. ஏற்கனவே இந்த திட்டத்தை செயல்படுத்தி வேகமாக செய்துகொண்டு வருகிறோம்.

எந்த ஒரு திட்டத்திற்கும் கால அவகாசம் மிகவும் முக்கியம். மேலும் முதல்வரின் அறிவுரையின் பேரில் இந்த திட்டத்தை கால அவகாசம் கொடுத்து முறைப்படி செய்ய வேண்டும் என குழு அமைத்து இருக்கிறோம் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.


Tags : Minister of Local Government, SBVelumani
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...