நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத வேலூர் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் அண்ணாதுரையை ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் நேரில் ஆஜர்படுத்த வேலூர் எஸ்.பிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டும் அண்ணாதுரை ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Court contempt case, police inspector, detention order, High Court order
× RELATED திப்பு ஜெயந்தி விழா ரத்து முடிவை...