×

தமிழகத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள ஏராளமான நீர்நிலைகளும் நீர் வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் தாக்கல் செய்திருந்தார். ஆக்கிரமிப்பு  காரணமாக போதிய அளவு தண்ணீரை தேக்க முடியவில்லை என்று பல கண்மாய்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக  மனுவில் முறையிடப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், நீர்வழித்தடங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும் , தூர்வாரி தண்ணீரை தேக்கி உரிய நடவடிக்கை எடுக்கவும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதேபோல் தமிழகத்தில் நீர்நிலைகள் நாளுக்கு நாள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் , வணிக வளங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் , இதனால் மழைநீரை சேகரிக்க முடியாமல் நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதே பிரச்சனையை முன்வைத்து பலரும் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை இன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் , புகழேந்தி அமர்வு உயர்நீதிமன்ற மதுரை கிளை வரம்பிற்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது , பராமரிப்பதும் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைக்க உத்தரவிட்டனர்.  

தமிழக தலைமை செயலர் தலைமையில் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அந்த குழுவில் பொதுப்பணித்துறை செயலர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட துணை ஆட்சியர்கள் , பொதுப்பணித்துறை அதிகாரிகளை இடம்பெற செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் , இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் வீரகதிரவனை நியமித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கறிஞர் வீரகதிரவனும் பங்கேற்க உத்தரவிட்டு வழக்கை வருகின்ற அக்டோபர் - 3 ஆம் தேதி ஒத்திவைத்தார்.


Tags : Water Resources, Conservation Committee, High Court Madurai Branch, Directive
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...