எல்லா ஆட்சியிலும் பால்விலை உயர்த்தப்பட்டுள்ளது: உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பால்விலையை  உயர்த்தப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய  அவர் எல்லா ஆட்சியிலும் பால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக கூறினார். பால்விலை உயர்வு என்பது 5 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்திருந்தது.

ஏற்கனவே ஒருமுறை பால்விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னர் தான் பால்விலையின் ஏற்றம்  நடைமுறை படுத்தப்பட்டிருக்கிறதி தவிர தானாக பால்விலையை  உயர்த்தப்படவில்லை.  மேலும் எல்லா ஆட்சிக்காலத்திலும் பால்விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதைப்பற்றி மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் தெளிவாக தெரிவித்திருக்கிறார் என்று அவர் கூறினார்.


Tags : all the regime, milk milk has been raised, Food Minister Kamaraj
× RELATED Self Lifeனா என்னன்னு தெரியுமா?