அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்வோர் 19 % ஆக உயர்வு : மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்பவர்களின் சதவீதம் 2 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் காது கேட்கும் கருவிகள் இலவசமாக வழங்கும் விழா மற்றும் ரத்த சுத்தகரிப்பு துவக்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 2 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைக்காக 1000 டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்துகொண்டிருந்த நிலையில் அரசு மருத்துவமனையில் 2 % ஆக இருந்தது.

இப்போது தமிழக அரசு 1000 டயாலிசிஸ் இயந்திரங்களை அனைத்து தாலுகா கிராமப்புற மருத்துவமனையில் இந்த வசதியை ஏற்படுத்திய காரணத்தினால், இப்போது தமிழக அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டத்தில் 2 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

Related Stories: